.webp)
Colombo (News 1st) இன்று(01) முதல் அமுல்படுத்தப்படவிருந்த பஸ் கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பஸ் கட்டணம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று(01) பிற்பகல் அறிவிக்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்தார்.
எரிபொருள் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட 2.5 வீத பஸ் கட்டணத் திருத்தத்தை இன்று முதல் அமுல்படுத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.