.webp)
Colombo (News 1st) நிதியமைச்சின் செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று(23) முற்பகல் வழங்கப்பட்டது.
இதனிடையே, வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தகுதியான ஒருவரை பெயரிடுமாறு தேர்தல் ஆணைக்குழு தேசிய மக்கள் சக்திக்கு அறிவித்துள்ளது.