ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் பாராளுமன்றம் அனுமதி

ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் பாராளுமன்றம் அங்கீகாரம்

by Staff Writer 22-06-2025 | 9:45 PM

Colombo (News 1st) தேசிய பாதுகாப்பு பேரவை ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனியின் விருப்பத்திற்கு அமைய  எந்நேரத்திலும் ஹோர்முஸ் நீரிணையை(Strait of Hormuz) மூடுவதற்கு ஈரான் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சர்வதேச அளவில் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் எரிவாயு விநியோகங்கள் ஹோர்முஸ் நீரிணையூடாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

அமெரிக்க தாக்குதலையடுத்து ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தை முடக்குவதற்கு ஈரான் பாராளுமன்றத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இறுதி தீர்மானத்தை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பேரவையால் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உலகில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் 20 சதவீதம் இந்த நீரிணையூடாகவே கொண்டுசெல்லப்படுகின்றது.

எந்தவகையிலேனும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுக்குமாயின் அது உலக பொருளாதார நிலைமையை மேலும் சீர்குலைக்கும் என்பதுடன் மசகு எண்ணெய் விலைகளும் அதிகரிக்கக்கூடும்.

இதனிடையே அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

எனினும் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான யுரேனியம் திட்டத்திற்கு அமெரிக்கா உடன்படப்போவதில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய செய்திகள்