வீரகெட்டியவில் 110Kg ஹெரோயின் கைப்பற்றல்

வீரகெட்டியவில் 110Kg ஹெரோயின் கைப்பற்றல்

by Staff Writer 10-06-2025 | 2:47 PM

Colombo (News 1st) வீரகெட்டிய, அதுபொதே பகுதியில் கறுவாத்தோட்ட காணியிலிருந்து 110 கிலோ 460 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

தங்காலை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு வரும் கறுவாத்தோட்டத்துடன் கூடிய காணியிலிருந்தே குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்