அமெரிக்க ஜனாதிபதியால் ஏனைய நாடுகளின் மீது வரி..

அமெரிக்க ஜனாதிபதியால் ஏனைய நாடுகளின் மீது வரி விதிக்க முடியாது - வர்த்தக கூட்டாட்சி நீதிமன்றம்

by Staff Writer 29-05-2025 | 4:08 PM


Colombo (News 1st)  அமெரிக்காவினால் ஏனைய நாடுகளின் மீது விதிக்கப்பட்ட தீர்வை வரியை அமுல்படுத்துவதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் மேன்முறையீடு செய்துள்ளது.

சர்வதேச அவசர கால பொருளாதார அதிகார சட்டத்திற்கமைய அமெரிக்க ஜனாதிபதியால் ஏனைய நாடுகளின் மீது வரி விதிக்க முடியாது என அந்நாட்டு வர்த்தக கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்பளித்து சில நிமிடங்களுக்குள் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்படாத நீதிபதிகளால் தேசிய அவசர நிலையை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க இயலாது என வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்த பிரச்சினையை கையாள்வதற்கு அனைத்து விதமான நிறைவேற்று அதிகாரத்தையும் பயன்படுத்துவதாக வௌ்ளை மாளிகையின் பிரதி ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பின் ஊடாக அமெரிக்க ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை டொனால்ட் ட்ரம்ப் மீறியுள்ளதாக சர்வதேச வர்த்தக நீதிமன்றம் இன்று(29)  தீர்ப்பளித்திருந்தது.

வௌ்ளை மாளிகையால் அமுல்படுத்தப்படும் அவசர கால சட்டத்தினூடாக ஏனைய நாடுகளின் மீது வரிகளை விதிப்பதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை என அந்நாட்டு நீதிமன்றம் இன்று அறிவித்திருந்தது.