பாதசாரி கடவையில் மின் விளக்குகளை பொருத்தும் திட்டம

பாதசாரி கடவையில் மின் விளக்குகளை பொருத்தும் திட்டம்

by Staff Writer 28-05-2025 | 10:45 AM

பாதசாரி கடவைகளில் மின் விளக்குகளை பொருத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

இதன் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட ஆபத்தான இடங்களில் அமைந்துள்ள பாதசாரி கடவைகளுக்காக மின் விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் கே.சந்திரகுமார தெரிவித்தார்.

இதற்காக சூரிய மின்கலங்களைப் பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

இதனூடாக இரவு நேரங்களில் பாதசாரி கடவைகளில் பயணிப்பவர்களை சாரதிக்கு தௌிவாக அடையாளம் காணமுடியும் என்பதுடன் இதனூடாக ஏற்படும் விபத்துகளைக் குறைத்துக் கொள்ள முடியும் என கே.சந்திரகுமார குறிப்பிட்டார்.

இதுவரை குருணாகல், காலி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அவ்வாறான 140 பாதசாரி கடவைகளில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துகளால் வருடாந்தம் அதிகளவானோர் உயிரிழக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது