துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்..

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்..

by Staff Writer 28-05-2025 | 11:12 AM

விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் படி சிகிச்சைகளுக்காக சந்தேகநபர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

துமிந்த திசாநாயக்க விசேட வைத்தியர் ஒருவரால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

வௌ்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியில்  தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.