.webp)
Colombo (News1st) தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பிற்காக அடுத்த மாதம் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் டொக்டர் ஜனக சேனாரத்ன தலைமையில் நேற்று(27) கூடியது.