கண்டி சில பகுதிகளில் 36 மணித்தியால நீர்வெட்டு

கண்டி நகரின் சில பகுதிகளில் 36 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 28-05-2025 | 11:00 AM

Colombo (News1st)கண்டி நகரின் சில பகுதிகளில் இன்று(28) பிற்பகல் 02 மணி முதல் நாளை மறுதினம்(30) அதிகாலை 02 மணி வரை 36 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கண்டி மாநகர சபை தெரிவித்தது.

கண்டி - குட்ஷெட் பஸ் நிலைய நிர்மாணப்பணிகளின் போது நீர்க்குழாய் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பேராதனை வீதி, வில்லியம் கோபல்லாவ மாவத்தை, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகிலிருந்து நகர சபை சந்தி வரையான பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென கண்டி மாநகர சபை தெரிவித்தது.

அஸ்கிரிய, கண்டி நகர வாவியை சுற்றியுள்ள பகுதி, ரஜ பிஹில்ல மாவத்தை, பூவெலிகட, நெத்தே கும்புர, குருதெனிய, அம்பிட்டிய மற்றும் கண்டி நகர மத்தியில் உள்ள அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என கண்டி மாநகர சபை தெரிவித்துள்ளது.