.webp)
Colombo (News 1st) நிறைவுகாண் வைத்திய சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஆய்வுகூடப் பரிசோதனை மற்றும் உடற்கூற்று நிபுணர்கள் சேவை என்பன ஸ்தம்பிதமடைந்துள்ளன.
2 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிறைவுகாண் வைத்திய சேவை ஊழியர்கள் இன்று(27) காலை 8 மணியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் மற்றும் வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற மாணவர்களை நிறைவுகாண் வைத்திய சேவையில் இணைத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
தமது கோரிக்கைகளுக்கான உரிய பதில் கிடைக்கவில்லை எனின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென நிறைவுகாண் வைத்திய சேவை கூட்டு ஒன்றிணையத்தின் செயலாளர் சானக்க தர்மவிக்கிரம தெரிவித்துள்ளார்.