.webp)
Colombo (News 1st) வௌிநாட்டில் உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்து வழங்கியமை தொடர்பில் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைவிரல் அடையாளம் இன்றி கெஹெல்பத்தர பத்மேவின் கடவுச்சீட்டை குறித்த அதிகாரியே தயாரித்து வழங்கியிருக்கலாமென குற்றப்புலனாய்வு திணைக்களம் சந்தேகம் வௌியிட்டுள்ளது.
கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு போலி கடவுச்சீட்டை தயாரிக்க முயன்ற 2 சந்தேகநபர்கள் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த இருவரும் கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக கெஹெல்பத்தர பத்மே என்பவரின் நிழற்படங்களை WhatsApp ஊடாக பெற்று அதனை வடிவமைத்து குடிவரவு - குடியல்வு திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு 2014ஆம் ஆண்டு பெற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டின் ஊடாக கெஹெல்பத்தர பத்மே 2021ஆம் ஆண்டு வௌிநாடு சென்றுள்ளார்.
அத்துடன் குறித்த கடவுச்சீட்டானது கடந்த வருடத்துடன் காலாவதியாகியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனைத் தவிர கெஹெல்பத்தர பத்மேவின் நிழற்படத்தை பயன்படுத்தி இரண்டு வெவ்வேறு பெயர்களில் மேலும் 2 போலி கடவுச்சீட்டுகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளப்பட்டுள்ளமை இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.