பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலைகளில் மாற்றம்

பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலைகளில் மாற்றம்

by Staff Writer 24-05-2025 | 12:38 PM

Colombo (News1st) பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலைகளில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் நிர்வாக மற்றும் நிர்வாகம் சாரா ஊழியர்களுக்கான உணவு கட்டணங்களை திருத்தியமைக்க கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற குழு கூட்டத்தில் திர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முடிவுகளை மீளாய்வு செய்ய சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்  பாராளுமன்ற குழு கூட்டம் நேற்று(23) நடைபெற்றது.

இதன்படி பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலையை அடுத்த மாதம் முதல் மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்வாக மட்ட அதிகாரிக்கு உணவுக்காக மாதத்திற்கு 4,000 ரூபா மற்றும் நிர்வாகமற்ற ஊழியருக்கு மாதம் 2,500 ரூபா என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.