.webp)
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 3ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று(20) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 3 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.