.webp)
Colombo (News1st) யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும் (18).
2009 இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இன்று(18) நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானதுடன் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுக்கஞ்சியும் பரிமாறப்பட்டது.
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வு ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நடைபெறுகின்றது.