.webp)
Colombo (News 1st) தெஹியத்தகண்டி - விஜயபுர பகுதியில் மின்னல் தாக்கி 47 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வயலில் வேலை செய்துகொண்டிருந்த போதே குறித்த நபர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளார்.
இதனிடையே, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, காலி, மாத்தறை, மாவட்டங்களில் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பலத்த காற்று, மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளது.