தெரணியகலயில் ஆணின் சடலம் மீட்பு

தெரணியகலயில் ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 14-05-2025 | 7:27 PM

Colombo (News 1st) தெரணியகல - பொல்வத்தென்ன பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தெரணியகல - உடஹேன்கந்த பகுதியைச் சேர்ந்த 42 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம்(12) தமது வீட்டிலிருந்து சென்று மீண்டும் வீடு திரும்பாமையால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் அவர் தெரிணியகல - பொல்வத்தென்ன பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.