.webp)
Colombo (News 1st) எந்தவொரு கட்சியும் 50 வீதமான பெரும்பான்மையை பெறாத உள்ளூராட்சி மன்றங்களின் முதல் கூட்டத்தை நடத்துதல் மற்றும் தலைவர் தெரிவு தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளர்களுக்கான வழிகாட்டல்கள் அடங்கிய கோவை வௌியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் இந்த வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.
9 மாகாணங்களிலும் உள்ள உள்ளூராட்சி ஆணையாளர்களும் குறித்த வழிகாட்டல்களுக்கு அமைய செயற்பட வேண்டும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் பிரகாரம் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை 7 நாட்களுக்குள் தமக்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
உறுப்பினர்களை பெயரிடும் போது பெண் பிரதிநிதித்துவம் இடம்பெறவேண்டிய முறைமை தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டும் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் கிடைத்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார ரீதியாக வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயருடன் கூடிய வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.