.webp)
Colombo (News1st) சித்திரகுப்தன் அவதரித்த நாளாக போற்றப்படும் சித்திரா பௌர்ணமி இன்றாகும்(12).
மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்ப அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம், நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் சித்திரா பௌர்ணமி போற்றப்படுகிறது.
இந்நாளில் தாயை இழந்தவர்கள் விரதமிருந்து அவர்களின் ஆத்ம விமோசனத்திற்காக பிதுர் தர்ப்பணம் செய்வது சிறப்புரியதாகும்.
இந்நாளில் கோவில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் சித்திர புத்திரனார் கதை படித்து கஞ்சி காய்ச்சி எல்லோருக்கும் கஞ்சி வழங்குவது வழமையான நிகழ்வாகும்.
அஸ்வினி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களில் 14ஆவதாக வரும் சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்பு நட்சத்திரமாக அமைகின்றது.
மாதந்தோறும் வரும் சித்திரை நட்சத்திர தினங்களில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்துடன் கூடிவரும் சித்திரை நட்சத்திர தினம் சித்திரா பௌர்ணமி என சிறப்பித்து கூறப்படுகின்றது.