ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - ஒருவர் பலி

by Staff Writer 11-05-2025 | 5:53 PM

Colombo (News1st) கிளிநொச்சி நோக்கி பயணித்த யாழ் ராணி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பளை கச்சாய்வெளி ரயில் கடவையில் இன்று(11) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பளை தம்பகாமம் பகுதியைச் சேர்ந்த 46 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.