.webp)
Colombo (News 1st) நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று(11) அதிகாலை பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
விபத்தில் 50-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குருணாகலிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு இன்று காலை விபத்திற்குள்ளானது.
காயமடைந்த 59 பேர் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இவர்களில் கவலைக்கிடமான நிலையிலுள்ள 22 பேர் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைக்காக விசேட விசாரணைக்குழு கெரண்டியல்ல பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன சென்றுள்ளார்.