நாட்டில் நிலவிய இன்சுலின் தட்டுப்பாடு நிவர்த்தி

நாட்டில் நிலவிய இன்சுலின் தட்டுப்பாடு நிவர்த்தி

by Staff Writer 10-05-2025 | 7:54 PM

Colombo(News1st) நாட்டில் நிலவிய இன்சுலின் தட்டுப்பாடு நிவர்த்திக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நாட்டில் பயன்படுத்தப்படும் 2 வகையான இன்சுலிகளுக்கு தட்டுப்பாடு நிலவியதாக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார்.

இந்த  2 வகை இன்சுலின் தொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு ஏற்பட்டால் அவற்றை திறந்த சந்தையில் கொள்வனவு செய்வதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்ததார்.

தற்போதுள்ள இன்சுலின் கையிருப்பு எதிர்வரும் ஜூன் மாதம் வரை போதுமானது என அவர் மேலும் கூறினார்.