.webp)
Colombo(News1st) அரச ஊழியர்களுக்கான அனர்த்த நிவாரண கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்று நிரூபத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 250,000 ரூபாவாக இருந்த அரச ஊழியர்களின் அனர்த்த நிவாரண கடன் தொகை 4 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த வரவு செலவு திட்டத்திற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.