.webp)
Colombo (News1st)யாழ்.அனலைதீவு கடலில் 300 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் மூவர் இன்று(07) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள கஞ்சாவுடன் மன்னாரை சேர்ந்த இருவர் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் கடற்படையினாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.