2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் NPP அமோக வெற்றி

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி

by Chandrasekaram Chandravadani 07-05-2025 | 12:38 PM

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் வௌியாகின.

தேசிய மக்கள் சக்தி 4,503,930 (43.26%) வாக்குகளுடன் 3927 ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 (21.69%) வாக்குகளுடன் 1767 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு 954,517 (9.17%) வாக்குகளுடன் 742 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி 377 ஆசனங்களை பெற்றுள்ளது.

6 மன்றங்களில் முன்னிலை பெற்றுள்ள ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 116 ஆசனங்களை பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 54 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.