உலக வங்கியின் தலைவர் நாட்டிற்கு வருகை

உலக வங்கியின் தலைவர் நாட்டிற்கு வருகை

by Staff Writer 07-05-2025 | 9:47 PM

Colombo (News 1st) உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா(Ajay Banga) மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் உலக வங்கியின் தலைவர் இன்று(07) நாட்டிற்கு வருகை தந்தார்.

இலங்கையில் தொழில்வாய்ப்புகளை உருவாக்கி தனியார் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக எதிர்வரும் 3 ஆண்டுகளில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதியுதவியை வழங்குவதாக உலக வங்கி இன்று அறிவித்துள்ளது.

எரிசக்தி, விவசாயம் சுற்றுலா பிராந்திய அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளுக்கு குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் இந்த நிதயுதவி இலங்கை மக்களுக்கான முதலீடாகுமென ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார். 

இலங்கையின் முன்னேற்றத்தை கட்டியெழுப்புவதற்காக தற்போதிருந்தே செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா தௌிவுபடுத்தியுள்ளார்.