பொலிஸாரை தாக்க முற்பட்டவர் மீது துப்பாக்கிச்சூடு

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு

by Staff Writer 06-05-2025 | 12:48 PM

Colombo(News1st)  சீதுவ பகுதியில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் செயற்பட்ட நபர் மீது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் பொலிஸ் உத்தியோகத்தரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இதன்போது சந்தேகநபரை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.