சப்ரகமுவ பல்கலையின் 4 மாணவர்கள் விளக்கமறியலில்..

சப்ரகமுவ பல்கலையின் 4 மாணவர்கள் விளக்கமறியலில்..

by Staff Writer 05-05-2025 | 6:38 PM

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 மாணவர்களும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களை இன்று(05) ஆஜர்ப்படுத்திய போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளினால் 04 சந்தேகநபர்களும்  நேற்று(04) கைது செய்யப்பட்டனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்களே கைது செய்யப்பட்டனர்.