.webp)
Colombo (News 1st) ஏழு வருடங்களின் பின்னர் இலங்கை மகளிர் அணி இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட்களால் வெற்றி பெற்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 9 விக்கெட்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்றது.
நிலக்ஷிகா சில்வா அரைச்சதம் கடந்து 56 ஓட்டங்களையும் ஹர்ஷிதா சமரவிக்கிரம 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
2018ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை மகளிர் அணி, இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியை வெற்றி கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
இலங்கை, இந்திய, தென்னாபிரிக்க மகளிர் அணிகள் இந்த முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.