மீட்டியாகொட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மீட்டியாகொட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

by Staff Writer 04-05-2025 | 3:56 PM


Colombo(News1st) மீட்டியாகொட - தம்பஹிட்டிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மற்றுமொருவருடன் விடுதியொன்றில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவரால் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் துப்பாக்கிதாரிகளை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.