.webp)
Colombo (News 1st) பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மட்டத்தில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பிரதியமைச்சர், டொக்டர் மதுர செனெவிரத்ன தெரிவித்தார்.
சுமார் 2000 கல்விசார் ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக பல்கலைக்கழக பேராசிரியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னுரிமையின் அடிப்படையில் குறித்த வெற்றிடங்கள் நிரப்பப்படுமென பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.