நல்லை ஆதீன குரு முதல்வர் பூரணமடைந்தார்...

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பூரணமடைந்தார்...

by Staff Writer 02-05-2025 | 11:06 AM

Colombo (News 1st) நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பூரணமடைந்தார்.

கொழும்பில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு(01) பூரணமடைந்தார்.

சுவாமிகளின் திருவுடல் இன்று(02) யாழ்.ஆதீனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

நல்லை ஆதீனத்தின் குரு முதல்வராக அறமாற்றிய சுவாமிகள் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையிலும் மக்களுக்காக பல சேவைகளை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் பூரணமடைந்த செய்தி சைவமக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக இந்துக்குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.