.webp)
Colombo (News 1st) பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவுள்ளது.
சபாநாயகரின் தலைமையில் இன்று(02) காலை நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சுங்க கட்டளைச்சட்டத்தின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் எதிர்வரும் 8ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ள அதேநேரம் எதிர்வரும் 9ஆம் திகதி தனிநபர் பிரேரணை சபையில் முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, குற்றச்செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீள அறவிடுவதற்கான சட்டமூலம் எனப்படும் குற்றச்செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்ன கையொப்பமிட்டு சான்றுப்படுத்தினார்.
இந்த சட்டமூலம் வாக்கெடுப்பின்றி, திருத்தங்கள் இன்றி கடந்த மாதம் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க குற்றச்செயல்களின் வரும்படிகள் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.