.webp)
Colombo (News 1st) எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் பஸ் கட்டணம் திருத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் காணப்பட்ட எரிபொருள் விலை மற்றும் தற்போதைய விலைக்கு இடையிலான வேறுபாடு கணக்கிடப்பட்டதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்தார்.
விலையில் ஏற்பட்ட வேறுபாடு 4 வீதத்தை விட குறைவாக உள்ளதால் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.