.webp)
Colombo (News 1st) நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நேற்று(23) முதல் நாளை(25) மாலை 7 மணி வரை பரிசுத்த பாப்பரசரின் திருவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனை இடம்பெறவுள்ளது.