Colombo (News 1st) 2024ஆம் ஆண்டு இலங்கையின் திருப்புமுனையாக மாறும் என பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மத்துகமவில் இன்று(03) காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொள்கையுடைய சட்டத்தை மதிக்கின்றவர்களே தங்கள் கட்சியின் வேட்பாளர்களான போட்டியிடுவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அவர்கள் மக்களின் வளங்களை, பணத்தை திருடுவதில்லை எனவும் பொது வளங்களை வீண்விரயம் செய்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் சேவைக்கு தம்மை அர்ப்பணிக்க முடியுமானவர்களே வேட்பாளர்களாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தங்களிடம் சிறந்த திட்டம் காணப்படுவதாகவும் அதனூடாக நாட்டு மக்களின் வாழ்க்கையை அழகாக மாற்றுவதற்கு தாங்கள் செயற்படுவதாகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய இதன்போது தெரிவித்துள்ளார்.