போலி இலக்கத்தகட்டுடன் ஜீப்பொன்று கண்டுபிடிப்பு

கண்டி - தெல்தெனிய பகுதியில் போலி இலக்கத்தகட்டுடன் ஜீப்பொன்று கண்டுபிடிப்பு

by Staff Writer 01-11-2024 | 8:13 PM

Colombo (News 1st) கண்டி - தெல்தெனிய பகுதியில் போலி இலக்கத்தகட்டுடன் ஜீப்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொன்டெரோ (Montero) ரகத்தை சேர்ந்த குறித்த ஜீப்பின் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு வாகனம் இருப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட குறித்த ஜீப்பின் உரிமையாளரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.