Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கறுவா ஏற்றுமதி மூலம் 35,778 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.
வருடத்தின் முதல் 9 மாதங்களில் 11,347 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.