Colombo (News 1st) காஸா போர் நிறுத்தத்திற்கான புதிய பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, கட்டார் நாடுகளின் தலைமையில் புதிய பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.
அடுத்த வாரம் கட்டாரின் டோஹாவில்(Doha) இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கலந்துரையாடலில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான CIA பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸ் ( William Burns) மற்றும் இஸ்ரேலின் உளவுப்பிரிவு மொசாட்டின் தலைவர் டேவிட் பர்னியா (David Barnea) ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தில் 43,500 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் தற்போது லெபனான், ஈரான் ஆகிய நாடுகள் வரை வியாபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.