Colombo (News 1st) சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாப்பத்திரம் இரத்துச்செய்யப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று(180 பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அது தொடர்பில் தொடர்ந்தும் கிடைக்கும் முறைப்பாடுகளை உரிய முறையில் விசாரணை செய்து இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.