Colombo (News 1st) ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சிலர் கடமைக்கு சமுகமளிக்காமையினால் அனுராதபுரம் - காங்கேசன்துறை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து தலைக்கவசமொன்று காணாமல் போன காரணத்தினால் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இவ்வாறு கடமைக்கு சமுகமளிக்காதுள்ளதாக ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஏ.ஜே.எம்.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இன்று(18) காலை முதல் குறித்த ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.