Colombo (News1st) மரணத்தை தழுவிய ஜனாதிபதி வேட்பாளர் மொஹம்மட் இல்யாஸுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளை செல்லுபடியற்ற வாக்குகளாக கருதுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
ஐட்ரூஸ் மொஹம்மட் இல்யாஸ் மரணித்ததன் பின்னர் அவர் சார்பில் வேறு ஒரு வேட்பாளரின் பெயரை முன்மொழியுமாறு குறித்த வேட்பாளரை சார்ந்தோருக்கு அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அந்த அறிவிப்புக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.
அதற்கமைய வாக்கெடுப்பு தொடர்பான ஆவணங்களிலிருந்தும் வாக்குச் சீட்டிலிருந்தும் ஐட்ரூஸ் மொஹம்மட் இல்யாஸின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.