Colombo (News 1st) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால், இலங்கைக்கு சுற்றுலா செல்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில், தமது சுற்றுப்புறங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் ஊடகங்களைக் கண்காணித்து புதிய தகவல்களின் அடிப்படையில் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறும் அமெரிக்கா, தமது நாட்டு பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.