Colombo (News 1st) நைஜீரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
எரிபொருள் கொள்கலன் மற்றும் ட்ரக் வண்டி ஆகியன ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரக் வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட கால்நடைகளும் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற பகுதியில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.