Colombo (News 1st) ஜப்பானின் தென் பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த சூறாவளி காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.
12.5 மில்லியன் மக்கள் வாழும் Kyushu தீவில் இவ்வாறு சூறாவளி ஏற்பட்டுள்ளது.
மணித்தியாலத்திற்கு சுமார் 252 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 24 மணித்தியாலங்களில் 600 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆயிரக்கணக்கானோருக்கான மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.