பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணாயக்கார, ஹரின் பெர்னாண்டோவை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டரீதியானதும் சரியானதும் என உயர்நீதிமன்றம் இன்று(09) தீர்ப்பளித்துள்ளது.
தம்மை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டவிரோதமானது எனவும் அந்த தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறும் கோரி அமைச்சர்களான மனுஷ நாணாயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான இறுதி தீர்ப்பு இன்று(09) அறிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரிப்பதாக நீதியரசர்கள் குழாம் தெரிவித்தது.
விஜித்த மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தின் முன்னிலையில் குறித்த மனு இன்று(09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.