Colombo (News 1st) ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வர்(Yahya Sinwar) பெயரிடப்பட்டுள்ளார்.
டோஹாவில் 2 நாட்களாக நடைபெற்ற நீண்ட கலந்துரையாடல்களை அடுத்து ஹமாஸ் அமைப்பின் அனைத்து பிரிவுகளுக்கும் பொறுப்பான தலைவராக யாஹ்யா சின்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.
காஸா நிலப்பரப்பில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக 2017ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவரும் இவர் தற்போது அரசியல் பிரிவிற்கும் தலைவராகியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் தலைமைத்துவம் ஏகமனதாக யாஹ்யா சின்வரை தலைவராகத் தெரிவு செய்ததாக அந்த அமைப்பின் சிரேஷ்ட அதிகாரியொருவர் அறிவித்துள்ளார்.
ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக செயற்பட்டு வந்த இஸ்மாயில் ஹனியா கடந்த 31ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.