பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ

by Staff Writer 07-08-2024 | 8:43 AM

COLOMBO (News 1st) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த அறிவிப்பை விடுத்தார்.

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான நிகழ்வு, பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஸ, உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.