Colombo (News 1st) மட்டக்களப்பு - ஏறாவூர் மிச்சிநகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எறாவூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றிரவு(06) சடலம் கண்டெடுக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மிச்சிநகரைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக எறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.