Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தலையீடு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தாக்கல் செய்திருந்த மனுவில் கோரப்பட்ட இடைக்கால தடையுத்தரவை வழங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(24) மறுத்துள்ளது.
இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக தயாசிறி ஜயசேகரவினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.