அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

பொதுமக்களின் அமைதியை பேணும் நோக்கில் முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி

by Staff Writer 23-07-2024 | 2:52 PM

Colombo (News 1st)  நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொதுமக்களின் அமைதியை பேணும் நோக்கில், முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது. 

அதற்கமைய இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் சகல உறுப்பினர்களும் நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். 

நேற்று(22) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.